விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்த கலிதீர்த்தான் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி சரோஜா (80), அவரது மகள் பூங்காவனம் ஆகியோர் தனி யாக வசித்து வந்தனர்.
இவர்களது குடியிருப்பு அருகேஉள்ள செங்கல் சூளையில் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி யைச் சேர்ந்த நாகலிங்கம்-அஞ் சம்மாள் தம்பதியினர் வேலை செய்து வந்தனர். சரோஜா குடியிருப்புக்கு அருகில் வசித்து வந்த அம்சா என்பவர், நேற்று அதிகாலை சரோஜா வீடு அருகே சென்றபோது, சரோஜா, பூங்காவனம் இருவரும் பலத்தக் காயங்களுடன் கிடந்தனர்.
தகவலின் பேரில், போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது, சரோஜாவும், பூங்காவன மும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
மேலும் 100 மீட்டர் தொலைவில் செங்கல் சூளையில் வேலை செய்த நாகலிங்கம்- அஞ்சம்மாள் தம்பதியினர் படு காயங்களுடன் கிடந்தனர். இருவரையும் மீட்ட போலீ ஸார் முண்டியம்பாக்கம் அரசுமருத்துவமனையில் அனும தித்து, இரு பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர் பாக விசாரணை நடத்தி வரு கின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தை விழுப்புரம் டிஐஜி பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் நாதா ஆகியோர் பார்வை யிட்டுச் சென்றனர்.