முன்னாள் படைவீரர் நலன் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி நாள் வசூலை ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். 
Regional02

அரசு நிர்ணயித்த அளவை விட : இரு மடங்கு கொடி நாள் வசூல் இருக்கட்டும் :

செய்திப்பிரிவு

படை வீரர் கொடி நாளினை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் வசூலை ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது:

முப்படைகளிலும் பணியாற்றிய படை வீரர்களின் தியாகம் மற்றும் தன்னலமற்ற சேவைகளை போற்றிடும் விதமாக படைவீரர்களுக்காக கொடிநாள் விழா ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு அரசு நிர்ணயித்த கொடிநாள் வசூல் இலக்கு ரூ.57 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக ரூ.15 லட்சத்து 47ஆயிரம் பெறப்பட்டது. நடப்பாண்டில் அரசு நிர்ணயித்துள்ள கொடிநாள் இலக்கு ரூ. 69 லட்சத்து 42ஆயிரம் ஆகும். இலக்கை விட கூடுதலாக இரு மடங்கு கொடிநாள் வசூலினை அனைத்து துறை அலுவலர்களும் செய்து தர வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கொடிநாள் வசூலிற்கு தாராளமாக நிதியுதவி அளித்திட வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT