Regional01

ரயில்வே பணி தேர்வுக்காக நிராகரித்த விண்ணப்பங்களை புதுப்பிக்க வாய்ப்பு :

செய்திப்பிரிவு

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ரயில்வேயில் பொறியியல், இயந்திரவியல், மின்சார பணிகள், தொலை தொடர்பு, மருத்துவமனை, பணிமனை பிரிவுகளில் உதவியாளர், ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் பதவிகளுக்கு 2019, பிப். 23-ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இந்த விண்ணப்பங்கள் சிலவற்றில் தவறான புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றுக்காக நிராகரிக்கப்பட்டன. இந்த விண்ணப்பதாரர்களுக்கு சரியான விண்ணப்பங்கள் வழங்க ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி, அதிகாரப்பூர்வ ரயில்வே தேர்வாணைய இணையதளங்களில் டிச.15 முதல் மாறுதலுக்கான இணையதள இணைப்பு கொடுக்கப்படும். அதில் தங்களது சரியான புகைப்படம், கையெழுத்தை பதிவு செய்யலாம்.

தங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை அறிய ரயில்வே தேர்வு ஆணைய இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT