Regional01

மதுரை ஆட்டோ ஓட்டுநரிடம் - பணம் பறித்த ரவுடி கைது :

செய்திப்பிரிவு

மதுரையில் ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

மதுரை விளாச்சேரியைச் சேர்ந் தவர் ஆட்டோ ஓட்டுநர் ஜான் (35). இவர் நேற்று முன்தினம் பெரியார் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் ரூ.2,400-ஐ பறித்துச் சென்றார். இதுகுறித்து புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் விசாரித்தனர்.

காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவின்பேரில், துணை ஆணையர் தங்கதுரை தலை மையில் எஸ்எஸ். காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் அடங்கிய தனிப்படையினர் அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் அந்நபர் ரவுடி பார்த்தசாரதி (28) எனத் தெரிய வந்தது.

அவரை தனிப்படையினர் எச்.எம்.எஸ். நகரில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கி இருந்தபோது மடக்கி பிடித்தனர். அவர் மீது 8 கொலை உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும், ஆந்திராவில் ஒரு கொலை வழக்கில் தேடப் படுவதும் தெரியவந்தது.

SCROLL FOR NEXT