Regional01

வாடிப்பட்டி, பெரியகுளத்தில் ஓ.பி.எஸ்.-க்கு அதிமுகவினர் வரவேற்பு :

செய்திப்பிரிவு

அதிமுக ஒருங்கிணைப்பாளராக தேர்வான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை வந்தார். வாடிப்பட்டியில் அவருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் ஐயப்பன் எம்எல்ஏ, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் சரவணன், கருப்பையா, தமிழரசன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT