Regional03

பள்ளிபாளையத்தில் பல்வேறு வழக்குகளில் - பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்கள் மீட்டுக்கொள்ள அறிவுறுத்தல் :

செய்திப்பிரிவு

பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 15 தினங்களுக்குள் உரிய ஆவணங்களை வழங்கி பெற்றுக் கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 8 இருசக்கர வாகனங்கள் நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் விவரங்கள் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலக அறிவிப்பு பலகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை குமாரபாளையம் காவல் நிலையத்தில் 15 தினங்களுக்குள் வழங்கி தங்களது வாகனங்களை மீட்டுக் கொள்ளலாம். 15 தினங்களுக்கு மேலாக உரிமம் கோரப்படாத வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு அதில் கிடைக்கும் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT