Regional01

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் - கரூரில் இன்று தொழில் கடன் விழா தொடக்கம் :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் கரூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில்களுக்கான கடன் விழா இன்று(டிச.8) தொடங்கி டிச.15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை அலுவலகத்தில் நடைபெறும் இவ்விழாவில் சிறப்பு தொழில் திட்டங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூலதன மானிய திட்டங்கள் மற்றும் டி.ஐ.ஐ.சி.யின் 6 சதவீத வட்டி மானியத் திட்டங்கள் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

மேலும், தகுதி வாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் விரைந்து பெற்று தர ஆவண செய்யப்படுகிறது. இந்த விழாவில் சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். நீட்ஸ் திட்டத்துக்கு ஆய்வு கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோர் தங்கள் தொழில் திட்டங்களுடன், மேற்கண்ட அலுவலகத்துக்கு வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT