Regional01

தமிழகத்தில் டிச.21-ல் 100 இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் புதுக்கோட் டையில் நேற்று நடைபெற்றது. மாநில ஒருங்கி ணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மாநில வழிகாட்டுக் குழு உறுப்பினர்கள் பி.சண்முகம், பி.எஸ்.மாசிலாமணி, பசுமை வளவன், காளியப்பன், சாமி.நடராஜன், மேரி லில்லிபாய், போஸ், அமிர்தலிங்கம், காளி ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.

இக்கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்திருப்பதை வரவேற்பது. மின்சார திருத்த சட்டம் உள்ளிட்ட பிற கோரிக் கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் டிச.21-ம் தேதி 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT