திருச்சியிலிருந்து வாரணாசிக்கு விமானசேவை அளிக்கக் கோரி மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் மனு அளித்த எம்.பி.க்கள் ராமலிங்கம், செல்வராஜ். உடன் எம்.பி செல்லக்குமார். 
Regional01

திருச்சியிலிருந்து டெல்லி வழியாக வாரணாசிக்கு விமான சேவை : மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பி.க்கள் மனு

செய்திப்பிரிவு

திருச்சியிலிருந்து டெல்லி வழியாக வாரணாசிக்கு உள்நாட்டு விமான சேவை அளிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் தமிழகத்தைச் சேர்ந்த 14 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து டெல்லி வழியாக வாரணாசிக்கு தினசரி உள்நாட்டு விமானசேவை அளிக் கக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களான எஸ்.எஸ்.பழனி மாணிக்கம்(தஞ்சாவூர்), திருச்சி சிவா (மாநிலங்களவை), திருமாவளவன் (சிதம்பரம்), சு.திருநாவுக்கரசர் (திருச்சி), டி.ரவிக்குமார் (விழுப்புரம்), எம்.செல்வராஜ் (நாகப்பட்டினம்), எஸ்.ராமலிங்கம் (மயிலாடுதுறை), எம்.சண்முகம் (மாநிலங்களவை), எஸ்.ஜோதிமணி (கரூர்), எம்.முகமது அப்துல்லா (மாநிலங்களவை), கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் (மாநிலங்களவை), என்.நவாஸ்கனி (ராமநாதபுரம்), பி.செல்வராஜ் (மாநிலங்களவை), கார்த்திக் சிதம்பரம் (சிவகங்கை) ஆகிய 14 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனுவை, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் எம்.பி.க்கள் எஸ்.ராமலிங்கம், எம்.செல்வராஜ் ஆகியோர் நேற்று அளித்துள்ளனர். அப்போது கிருஷ் ணகிரி எம்.பி டாக்டர் ஏ.செல்லக்குமார் உடனிருந்தார்.

தினமும் இயக்க வேண்டும்

மேலும், இங்குள்ள ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் போன்றவற்கு வடமாநிலங் களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே, அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தினமும் காலை 6-7 மணிக்குள் திருச்சியிலிருந்து டெல்லி வழியாக வாரணாசிக்கும், மாலையில் வாரணாசியிலிருந்து டெல்லி வழியாக திருச்சிக்கும் தினசரி விமான சேவை அளிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT