Regional04

மணமேல்குடி உட்பட 3 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணமேல்குடி வட்டங் களில் கடந்த சம்பா சாகுபடி யின்போது பயிர்க் காப்பீடு செய்தவர்களில் பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததைக் கண்டித்து, விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணமேல்குடியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட 56 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல, ஆவுடையார்கோவிலில் 82 பேர், குரும்பூர்மேட்டில் மறியலில் ஈடுபட்ட 22 பேர் என மொத்தம் 160 பேர் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT