வாசுதேவநல்லூரில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழும நிறுவனர் இல்ல திருமண விழா நடைபெற்றது. 
Regional01

எஸ்.தங்கப்பழம் கல்விக்குழும திருமண விழா :

செய்திப்பிரிவு

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்விக்குழும நிறுவனர் எஸ்.தங்கப்பழம் - பால்த்தாய் ஆகியோரின் மகனும், கல்லூரி சேர்மனுமான எஸ்.டி.முருகேசன்- ரம்யாதேவி தம்பதியினரின் மகள் பார்கவி ரக்சனாவுக்கும், தென்காசி ஜெயகுரு குரூப்ஸ் ஆப் கம்பெனி உரிமையாளர் ராஜா ஜெயபால் - விஜயலட்சுமி தம்பதியினரின் மகன் சரவணக்குருவுக்கும் வாசுதேவநல்லூரில் திருமணம் நடைபெற்றது.

மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக மகளிர் நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைக்குமார், பழனி நாடார், ராஜா, தங்கபாண்டியன், குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி, முன்னாள் எம்எல்ஏ அ.மனோகரன் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண விழாவுக்கு வந்தவர்களை, எஸ்.தங்கப்பழம் கல்விக் குழும நிறுவனர் எஸ்.தங்கப்பழம் - பால்த்தாய், சேர்மன் முருகேசன் - ரம்யாதேவி, ராஜா ஜெயபால் - விஜயலட்சுமி தம்பதியினர் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர். லஷ்மன் ஸ்ருதி இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

SCROLL FOR NEXT