Regional01

நகை திருடிய பெண் கைது :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட் பட்ட கீழப்பாட்டம் யாதவர் தெருவை சேர்ந்த ரமாசெல்வி என்பவரது வீட்டு பீரோவில் இருந்த 20.53 கிராம் நகைகள் திருடப்பட்டது குறித்து தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ரமா செல்வியின் வீட்டுக்கு குப்பை எடுப்பதற்காக வரும் கீழப்பாட்டத்தை சேர்ந்த ஆனந்தி (39) என்பவர் பீரோவில் இருந்த நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20.53 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT