தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள். படம்: என்.ராஜேஷ் 
Regional02

மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு - மாநில சைக்கிள் போட்டி :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத் அமைப்பு சார்பில் 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி (மனவளர்ச்சி குன்றிய) மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் ரோச் பூங்கா முன்பு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஸ்பெஷல் ஒலிம்பிக் பகுதி இயக்குநர் மற்றும் செயலாளர் டி.பிரசன்ன பாலாஜி, தூத்துக்குடி மாவட்ட ஸ்பெஷல் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர் கே.கவிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் டி.வி.பேட்ரிக், தூத்துக்குடி சைக்கிளிங் கிளப் செயலாளர் தாமஸ் ராஜா செல்வம் மற்றும் ஸ்பிக் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் 15 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100 மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT