வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற எய்ட்ஸ் வார விழா நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் வழங்கிய மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் கண்ணகி. அருகில், மருத்துவமனையின் தலைவர் ஜி.வி.சம்பத் உள்ளிட்டோர். 
Regional02

நறுவீ மருத்துவமனையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு வார விழா :

செய்திப்பிரிவு

நறுவீ மருத்துவமனையில் எய்ட்ஸ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவ பணி கள் இணை இயக்குநர் டாக்டர் கண்ணகி பரிசுகளை வழங்கினார்.

வேலூர் நறுவீ மருத்துவ மனையில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் தலைவர் ஜி.வி.சம்பத் தலைமை தாங்கினார். மருத்துவ சேவை தலைவர் டாக்டர் அரவிந்த் நாயர் வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் ஆனந்த் சித்ரா கவுரவ விருந்தினராக பங்கேற்றார். நறுவீ மருத்துவமனை தொற்றுநோய் மருத்துவர் சதீஷ் சங்கர், எய்ட்ஸ் பரவும் விதம் குறித்து விளக்கினார்.

வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் கண்ணகி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று மருத்துவ மனையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். இதில், நறுவீ மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, துணை தலைவர் அனிதா சம்பத்,தலைமை நிதி அலுவலர் வெங்கட்ரங்கம், பொதுமேலாளர் நிதின் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், மருத்துவமனை தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன் நன்றி தெரிவித்தார். 

SCROLL FOR NEXT