எல்ஐசி பொன்விழாக் குழுமம் சார்பில், பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 2020-21 கல்வி ஆண்டில் குறைந்தபட்சம் 60% அல்லது அதற்கு இணையான தகுதியுடன், 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எல்ஐசி நிறுவனத்தின் ஒவ்வொரு கோட்ட அளவிலும், 20 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், அனைத்து பட்டம் மற்றும் பட்டயக் கல்வியில் சேர உதவித் தொகை வழங்கப்படும்.
இதுதவிர, ஒவ்வொரு கோட்ட அளவிலும் 10 சிறப்பு கல்வி உதவித் தொகை 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இதைப் பெற வரும் 31-ம்தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.licindia.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று எல்ஐசி அறிவித்துள்ளது.