கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து, கொளப்பலூரில் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. 
Regional01

கோபி சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை :

செய்திப்பிரிவு

கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், தாழ்குனி குளம் நிரம்பி, சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நீர்வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளான கொளப்பலூர், தாழ்குனி, நம்பியூர், சிறுவலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கொளப்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தாழ்குனி குளம் நிரம்பி, அதிக அளவு தண்ணீர் வெளியேறியது.

நேற்று அதிகாலை கொளப்பலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால், நீர் வழித்தடங்களைத் தாண்டி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பேரூராட்சி அலுவலகம் மற்றும் வாரச்சந்தையில் மழை நீர் புகுந்தது.

நீர் வழித்தடங்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகவே, வெள்ளநீர் புகுந்தது என்பதால், நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கரமிப்புகளை இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் கொளப்பலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதன்காரணமாக சாலைகளில் தேங்கிய நீர் குறைந்து போக்குவரத்து சீரானது.

SCROLL FOR NEXT