தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ், காவலர்களுக்கான முகாம்கள் நடத்தப்பட்டு, மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
இதையொட்டி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் கடந்த ஜூலை முதல் நவம்பர் வரை 1,340 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 1,058 கருணை மனுக்களாகும். இந்த மனுக்களின் அடிப்படையில் 366 காவலர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.164 காவலர்களின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. 51 காவலர்கள் பணிக்கு திரும்ப எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் பெண் காவலர்கள். இவ்வாறு டிஜிபி தெரிவித்துள்ளார்.