Regional02

விவசாயி, பெண் பாம்பு கடித்து மரணம் :

செய்திப்பிரிவு

மேலூர் அருகிலுள்ள ஏ.வள்ளால பட்டியைச் சேர்ந்தவர் பூசாரி என் பவரின் மனைவி நாகு (35). கடந்த 2-ம் தேதி அழகர்கோவில் மலை அடிவாரப் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப் போது, அவரை பாம்பு கடித் ததால் மயங்கினார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நாகு உயிரிழந்தார். மேலவளவு போலீஸார் விசாரிக்கின்றனர்.

டி.கல்லுப்பட்டி அருகே சின்னையாபாளையம் பெரிய கருப்பணன்(45). டிச.5-ம் தேதி அதே ஊரில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவரை பாம்பு கடித்தது. மயங்கிய அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பெரியகருப்பணன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT