விருதுநகர் மாவட்டம் திருச்சுழி யில் அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.
நரிக்குடியிலிருந்து அரசு நகரப் பேருந்து ஒன்று நேற்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு அருப்புக் கோட்டை நோக்கி வந்து கொண்டி ருந்தது. பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், திருச்சுழி பூமிநாதர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அங்கு காத்திருந்தவர்களில் சில மர்ம நபர்கள் பேருந்து மீது கல்வீசித் தாக்கினர். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் பேருந்து ஓட்டுநர் அங்கேயே பேருந்தை நிறுத்திவிட்டு கல்வீச்சு சம்பவம் குறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருச்சுழி, நரிக்குடி உள் ளிட்ட சுற்றுவட்டார கிராமங் களில் இருந்து நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள், தொழி லாளர்கள், அருப்புக்கோட்டை, விருதுநகருக்கு சென்று வருகின்றனர். ஆனால் காலை நேரங்களில் போதியளவு பேருந்துகள் இல்லாததால் படிக் கட்டுகளில் தொங்கியவாறு பயணிக்கின்றனர். போதிய பேருந்து வசதி இல்லாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்.