Regional02

ஒரேநாளில் - சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 71 பேர் கைது :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள், மது, லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 71 பேர் ஒரேநாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீஸார் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப்பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர்கள் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 71 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 295 மதுபாட்டில்கள், 500 கிராம் கஞ்சா, 1,400 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.2,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT