Regional01

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு - நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்துள்ள முடிகொண்டான் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக அப்பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், முடிகொண்டான் பிரிவு சாலையில் உள்ள சிறு பாலத்தை உயர்த்திக்கட்ட வலியுறுத்தியும் அக்கிராம விவசாயிகள் நேற்று முடிகொண்டான் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருமானூர் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் சமாதானப்படுத்தியதை அடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.

SCROLL FOR NEXT