வேலூர், திருவண்ணாமலையில் சசிகலா, டி.டி.வி. தினகரனை கண்டித்து அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச்சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது சசிகலா ஆதரவாளர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை கண்டிக்கும் வகையில், வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாநகராட்சி மூன்றாவது மண்டல அலுவலகம் எதிரில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் எம்.மூர்த்தி மற்றும் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று சசிகலா, டி.டி.வி.தினகரனை கண்டித்து முழக்கமிட்டனர்.
திருவண்ணாமலை
அப்போது அவர்கள், அதிமுக தலைவர்களை அவதூறாக பேசி வரும் டிடிவி தினகரனை கண்டித்தும், அவர் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். இதில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.