Regional03

எறிபந்து போட்டிக்கு இன்று தகுதி தேர்வு :

செய்திப்பிரிவு

மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி திருப்பத்தூரில் இன்று நடைபெறுகிறது.

டிசம்பர் 10, 11, 12 ஆகிய 3 நாட்களுக்கு மதுரையில் மாநில அளவிலான எறிபந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், திருப்பத்தூர் மாவட்ட அளவில் சீனியர் எறிபந்து போட்டிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, இன்று (செவ்வாய்க்கிழமை) திருப்பத்துார் அடுத்த உடையாமுத்தூரில் உள்ள செயின்ட் மேரிஸ் மேல் நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் தகுதிப்போட்டிகள் நடைபெற உள்ளன.

எனவே, திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். இது தொடர்பாக மேலும் விவரம் தேவைப்படுவோர், 99946-68207 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருப்பத்துார் மாவட்ட எறிபந்து கழகத்தலைவர் சுமன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT