Regional04

செங்கம் அருகே ஆசிரியர் இல்லாததால் - பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் :

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் மேல்கரியமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது.

அப்பள்ளியில் 63 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆனால், தலைமை ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். இதர ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், 63 மாணவர்களுக்கும் பாடம் கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். பள்ளி முன்பாக மாணவர்களை நிறுத்தி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அதிகாரி பேச்சுவார்த்தை

இதையடுத்து 1 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

SCROLL FOR NEXT