Regional01

ராசிபுரம் அருகே மனைவி கொலை கணவர் தலைமறைவு :

செய்திப்பிரிவு

ராசிபுரம் அருகே மனைவியை கொலை செய்து தலைமறைவான கணவரை புதுச்சத்திரம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ராசிபுரம் அருகே நவனி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தமிழ்ச்செல்வன் (25). இவரது மனைவி நந்தினி (22). மகன் பிரனேஷ் (3). நேற்று காலை நந்தினி அவரது வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

தகவல் அறிந்த புதுச்சத்திரம் காவல் துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

தமிழ்ச்செல்வனும், நந்தினியும்கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர்காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் நவனி கிராமத்தைச் சேர்ந்த வேறொரு நபருடன் நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதை தமிழ்ச்செல்வன் கண்டித்துள்ளார். எனினும், இருவரும் பழக்கத்தை கைவிடவில்லை. இதில் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் நேற்று காலை மனைவியை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார். புதுச்சத்திரம் போலீஸார் தமிழ்ச்செல்வனை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT