மதுரை விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயற்கை விவசாயம் தொடர்பான கண்காட்சியை பார்வையிடுகிறார் அமைச்சர் பி.மூர்த்தி. 
Regional01

முருங்கை மூலம் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்ய வசதி : அமைச்சர் பி.மூர்த்தி உறுதி

செய்திப்பிரிவு

மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக மண்வள தினம், பசுமைப் பண்ணையம், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கம் ஆகிய முப்பெரும் விழாக்களை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். 19 பேருக்கு ரூ.5,40,276 மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மதுரை உட்பட 6 மாவட்டங்களில் முருங்கை மூலமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய வசதி செய்து தரப்படும். வருங் காலத்தில் தோட்டக் கலைத் துறைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT