Regional01

முன்னாள் முதல்வர் நினைவு தினம் - ஜெயலலிதா உருவப்படத்துக்கு அதிமுகவினர் மரியாதை :

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெய லலிதா 5-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் மருதராஜ் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

கொடைக்கானல் மூஞ்சிக் கல்லில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி முன்னாள் தலைவர் தர் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

விருதுநகர்

இதேபோல் ராஜபாளையத்தில் அம்மா உணவகம் அருகே ஜெயலலிதா உருவப்படத்துக்கு அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் கிருஷ்ண ராஜ், வடக்கு நகர் செயலாளர் துரைமுருகேசன், தெற்கு நகர செயலாளர் பரமசிவம் உட்பட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம்

பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு ஜெயலலிதா பேரவை செயலாளர் வடமலையான் தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்தனர். முன்னாள் எம்எல்ஏ முத்தையா, நகர் செயலாளர் ஜமால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT