Regional02

சாத்தான்குளம் அருகே கோயிலில் சிசிடிவி கேமரா, உண்டியல் பணம் திருட்டு :

செய்திப்பிரிவு

சாத்தான்குளம் அருகே பொட்டல்விளை கிராமத்தில் சுடலை ஆண்டவர் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் காலை பூசாரி, நடை திறக்க வந்தபோது கோயிலில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. சிசிடிவி கேமரா, ஆம்ப்ளி பயர், உண்டியல் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தன. இதன் மொத்த மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கோயில் நிர்வாகி இடைச்சிவிளை கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (70) என்பவர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT