Regional01

பல்கலைக்கழக ஆசிரியர்கள் முழக்கப் போராட்டம் :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரி அலுவலர் சங்கம் இணைந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக காஜாமலை வளாகம் முன்பு நேற்று முழக்கப் போராட் டத்தில் ஈடுபட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மண்டலத் தலைவர் என்.சரவ ணன் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் க.ராஜா முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.பாலமுருகன் போராட்டத்தை தொடங்கிவைத்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் உறுப்புக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில், முன்னாள் மாநிலத் தலைவர் கே.பாண்டி யன், முன்னாள் மண்டலத் தலைவர் ஆர்.சாம்பசிவம், பொதுச் செயலாளர் பாலகுமார் மற்றும் உறுப்புக் கல்லூரி பொறுப்பாளர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT