திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாவட்டச் செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 
Regional01

திருவண்ணாமலையில் - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா : 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு :

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் 5-ம் ஆண்டு நினைவு நாள் தி.மலையில் நேற்று அனுசரிக் கப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் உருவப்படத்துக்கு தி.மலை தெற்கு மாவட்டச் செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தலைமையில் அதிமுக வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில், மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், மாவட்டப் பொருளாளர் நைனாகண்ணு, நகரச் செயலாளர் செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் குணசேகரன், ஒன்றியச் செயலாளர்கள் சரவணன், தொப்பளான், மகரிஷி மனோகரன், அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

SCROLL FOR NEXT