Regional02

ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி படிக்க - வரும் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

செய்திப்பிரிவு

ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் வரும் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி விடுதிகளில் 2021-2022-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே, மாணவர்கள் தங்களது புகைப்படம், வருமான சான்றிதழ், ஜாதிச்சான்று, ஆதார் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT