ஆரணியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாவட்ட ஆவின் தலைவர் பாரி பாபு தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 
Regional02

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு :

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாள் ஆரணியில் நேற்று அனுசரிக்கப்பட்டது.

ஆரணியில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாவட்ட ஆவின் தலைவர் பாரி பாபு தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், நகரச் செயலாளர் அசோக்குமார், மாவட்டப் பொருளாளர் கோவிந்தராசன், ஒன்றியச் செயலாளர்கள் வழக்கறிஞர் சங்கர், சேகர், கஜேந்திரன், திருமால், அரங்கநாதன், முன்னாள் நகராட்சி தலைவ ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

SCROLL FOR NEXT