முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று காலை 10 மணிக்கு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
தமிழக முதல்வராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாள் இன்றுஅனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இன்று காலை 10 மணிக்கு சென்னை மெரினாகடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர். நினைவிட வளாகத்தில் திறந்த மேடை அமைத்துஉறுதி மொழி மேற்கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து அமமுகபொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா 11 மணிக்குஅஞ்சலி செலுத்த உள்ளனர்.