Regional01

வடலூர் அரசு மகளிர் பள்ளியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் :

செய்திப்பிரிவு

வடலூரில் இன்று (டிச.5) வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மகளிர் திட்டம் மூலம் வடலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (வள்ளலார் ஞான சபை அருகே) இன்று (டிச.5) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் கடலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, இரண்டு (பாஸ்போர்ட் அளவு) புகைப்படங்கள், சுய விலாசமிட்ட அஞ்சல் உறைகள் ஆகியவற்றுடன் வரவேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு மகளிர் திட்ட அலுவலகத்தை 04142-292143,94440 94261, 94440 94258 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT