குமராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட குமராட்சி மற்றும் கீழவன்னியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது.
பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள் சுகுணா மற்றும் சாந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் மாணவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மேளதாளத்துடன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர் கண்ணுசாமி தரையில் அமர்ந்து மாணவ, மாணவிகளின் கையைப் பிடித்து கரும்பலகையில் உயிரெழுத்து எழுதி இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பள்ளி ஆய்வாளர் ஜீவானந்தம், வட்டார கல்வி அலுவலர் ராஜசேகரன், ஆசிரியர் பயிற்றுநர் மல்லிகா, இடைநிலை ஆசிரியர் சில்வியா, அம்பிகாசோனியா, அகிலா, முன்னாள் தலைமையாசிரியர் நகுலன், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் உமாமகேஸ்வரி விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மேளதாளத்துடன் வரவேற்றார்.