கடலூரில் பகுதியில் நேற்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. சுமார் 10 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி கரைக்கு வந்து சென்றது. தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை.
கடலூர் தாழங்குடா கடற்கரையையொட்டி, மீன் பிடிக்கும் உபகரணங்கள் வைக்கும் கட்டிடம் உள்ளது. ராட்சத அலை எழும்பி கட்டிடத்தில் மோதுவதால் அந்த பகுதில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை டிராக்டர் மூலம் கட்டி இழுத்து பாதுகாப்பான பகுதியில் நிறுத்தியுள்ளனர். இதற்கிடையே கடலூர் கடல் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.