புவனகிரி பேரூராட்சியில் தேங்கி நிற்கும் மழை நீரால் துர்நாற்றம் வீசுகிறது. அதை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, போராட் டத்தில் ஈடுபட்டனர்.
புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாத்தூரில் உள்ள செல்லப் பிள்ளையார் கோயில் மற்றும் காமராஜர் வீதிகளில் சமீபத்தில் பெய்த கன மழையால் மழைத் தண்ணீர் தெருக்களில் தேங்கியுள்ளது. தேங்கி உள்ள மழை நீருடன் கழிவு நீரும் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதி முழுவதும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக துர்நாற்றம் வீசி வருகிறது. சரியான வடிகால் வசதி இல்லாததால் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இப்பகுதி மக்கள், தெருக்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் என்று புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனுக்கள் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று அப் பகுதி மக்கள் திடீரென்று புவனகிரி பேரூராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் இல்லை. இது குறித்து தகவலறிந்த புவனகிரி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் தண்ணீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடு பட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தெருக்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.