Regional01

மாடக்குளம் கண்மாய் நிரம்பி உபரி நீர் நகருக்குள் புகுந்தது :

செய்திப்பிரிவு

மதுரை மாடக்குளம் கண்மாய் நிரம்பி அதன் உபரி நீர் நகர் பகுதியில் புகுந்தது.

மதுரை மாடக்குளம் கண்மாய் கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் நிரம்பியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இக்கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

அந்த தண்ணீர் தற்போது மாடக்குளத்தில் இருந்து வெளியேறி நகர்பகுதியில் செல்கிறது. அவ்வாறு மதுரை எல்லீஸ் நகரில் வந்த மாடக்குளம் கண்மாய் தண்ணீர் அப்பகுதி குடியிருப்பு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதில் மக்கள் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

SCROLL FOR NEXT