Regional01

தலைமை ஆசிரியையிடம் 10 பவுன் நகை பறிப்பு :

செய்திப்பிரிவு

மதுரை புதுவிளாங்குடியைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி அனுராதா(48). இவர் சோழவந்தான் அருகில் உள்ள கருப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிகிறார்.

இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து விளாங்குடியில் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அனுராதா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனர்.

இது குறித்து கூடல்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT