Regional02

சிறுமிக்கு பாலியல் தொல்லை - காளவாசல் உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை :

செய்திப்பிரிவு

போக்ஸோ வழக்கில் கைது செய்யப் பட்ட சுண்ணாம்பு காளவாசல் உரிமை யாளருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப் பளித்தது.

விருதுநகர் மாவட்டம், சேத்தூரைச் சேர்ந்தவர் முருகேசன் (47). சுண்ணாம்பு காளவாசல் நடத்தி வருகிறார். இவர் 2014-ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சேத்தூர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் அவரைக் கைது செய்தனர். வில்லிபுத்தூரில் உள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், முருகேசனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT