விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அருகே உள்ள கண்ணன் காலனியில் புதிதாக மின் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்றது. நமஸ்கரித்தான்பட்டியைச் சேர்ந்த மின் ஊழியர் காளிராஜ்(27), மாரனேரி முருகேசன்(29) ஆகியோர் மின் கம்பத்தில் ஏறி பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின் கம்பம் உடைந்து விழுந்தது. இதனால் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த காளிராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பலத்த காயமடைந்த முருகேசன், சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்விபத்து குறித்து, திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.