Regional02

எஸ்.ஐ. வீட்டில் 14 பவுன் திருட்டு :

செய்திப்பிரிவு

வில்லிபுத்தூர் காதிபோர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியமேரி. இவர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது கணவர் ஜான்பிரிட்டோ, அரசு போக்குவரத்து ஊழியர். இருவரும் நேற்று மாலை பணி முடிந்து வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 14 பவுன் நகைகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. வில்லிபுத்தூர் நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT