Regional02

அருப்புக்கோட்டை அருகே படத்திறப்பு நிகழ்ச்சி :

செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை அருகே அயன்ரெட்டியபட்டி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசுவின் தந்தை ரத்தினசாமி அண்மையில் காலமானார்.

அவரது உருவப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ரத்தினசாமியின் உருவப் படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி., எம்எல்ஏக்கள் எழிலன் நாகநாதன், ரூபி மனோகரன், இலங்கை எம்.பி சிவஞானம் தரன், நக்கீரன் கோபால் ஆகியோர் உரையாற்றினர்.

SCROLL FOR NEXT