சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் தமிழக அரசு 'இன்னுயிர் காப்போம்' என்ற திட்டம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக விபத்துகள், இறப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளை அலுவலர்கள் கண்டறிந்தனர். அதன்படி, கிருஷ்ணகிரி - சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் திம்மாபுரம், அவதானப்பட்டி, ராயக்கோட்டை மேம்பாலம், சுங்கச்சாவடி, குருபரப்பள்ளி உள்ளிட்ட 50 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் நேற்று நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், போலீஸார் விபத்துதடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகே நடைபெற்ற ஆய்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சாமி, ஏடிஎஸ்பி விவேகானந்தன், டிஎஸ்பி விஜயராகவன், வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்புச்செல்வன், தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பொறியாளர் ரமேஷ்பாபு மற்றும் எஸ்ஐக்கள் மோகன், சிவசுந்தர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அப்போது சாலைகளில், எந்தெந்த பகுதிகளில் புதிதாக அறிவிப்பு பலகைகள், சிக்னல்கள், வைக்கப்பட வேண்டும் என ஆய்வு மேற்கொண்டனர். இதே போல் மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் நடந்தது.