Regional01

ரயில் நிலைய அதிகாரி போக்ஸோவில் கைது :

செய்திப்பிரிவு

செந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று போலீஸார் கைது செய்தனர்.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சாகர்நாத்(37). இவர் அரியலூரில் தங்கி, செந்துறையை அடுத்த ஓட்டக்கோவில் ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அரியலூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சாகர்நாத்தை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT