அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராம்பிரசாத்(2). தனது வீட்டின் அருகே நேற்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் அருகே குமார் என்பவர் தனது வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட தோண்டியிருந்த பள்ளத்தில் ராம்பிரசாத் தவறி விழுந்தார்.
மழையின் காரணமாக பள்ளம் முழுவதும் தண்ணீர் இருந்ததால் வெளியே வரமுடியாத ராம்பிரசாத், நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த செந்துறை போலீஸார், சிறுவனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.