காரைக்கால்: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் காரைக்கால் நிரவி பகுதியில் உள்ள சாரதி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில், டீசல், பெட்ரோலின் தரம் மற்றும் அளவு உறுதி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. மேலும் பெட்ரோல் பங்க்கில் ஆட்டோமேஷன் வசதி பயன்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது புதிய எக்ஸ்ட்ரா ரிவார்டு உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது. புதிய வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், திருச்சி மண்டல மேலாளர் சிவமூர்த்தி, விற்பனை அதிகாரி ஆர்.பிரவீன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாரதி ஏஜென்சி உரிமையாளர் பா.குணசீலன் செய்திருந்தார்.