Regional02

காரில் தூங்கிய தொழிலாளி மர்ம மரணம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி கிருஷ் ணராஜபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (40), கட்டிடத் தொழிலாளி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன் பழைய கார் ஒன்றை வாங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு கணேசன் காருக்குள் தூங்கி உள்ளார். நேற்று காலை பார்த்தபோது, அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வடபாகம் போலீஸார் கணேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரி சோதனைக்காக அனுப்பி வைத் தனர்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டு கணேசன் இறந்தாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இறந்தாரா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT