தமிழகத்தில் புதிதாக 711 பேருக்குகரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஆண்கள்418, பெண்கள் 293 என மொத்தம்711 பேர் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 128, கோவையில் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 29,061 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 26 லட்சத்து 84,450 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 759 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 8,098 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 9 பேர்உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,513 ஆகஉயர்ந்துள்ளது. சென்னையில்8,614 பேர் இறந்துள்ளனர் என்றுதமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.