Regional02

அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் மனு :

செய்திப்பிரிவு

திருப்பூர் பொங்கலூர் ஒன்றியம் வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி கிருஷ்ணாபுரம் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம் நேற்று அளித்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி எங்கள் பகுதியில் பொதுக்கழிப்பிடம், ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடை, குழந்தைகள் விளையாட்டு மைதானம், பள்ளிக்கூடம், சமுதாய நலக்கூடம், விவசாய விளைபொருட்கள் வைப்பதற்கான உலர்களம், சுகாதார வளாகம், மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT